சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நாயகியாக நடிக்கும் ராதிகாவுடன் குட்டி கண்ணன் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குட்டி கண்ணனுடன் பூவரசி
தற்போது சீரியல்கள் அனைத்தும் மக்களின் பெரும் பொழுதுபோக்காக அமைந்துள்ளது. அதனாலேயே அனைத்து தொலைக்காட்சிகளும் பல சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். இந்நிலையில் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் பூவே உனக்காக.
இதில் இளம் நடிகர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் மக்கள் மத்தியில் பிரபலமானது. மேலும் இதில் கதிர் பூவரசி ஜோடி தான் அனைத்து மக்களின் பேவோரைட்.
இப்படி இருக்க தற்போது சீரியலில் முக்கிய நபர்கள் அனைவரும் விலக ஆரம்பித்துள்ளனர். அதாவது ஹீரோவே இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது அசிம் தான் இதில் நாயகனாக நடித்து வருகிறார்.
இப்பொழுது கதையின் ட்ராக்கே மொத்தமாக மாறி விட்டது. இப்படி இருக்க விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ் பேக் சீனில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த குட்டி கண்ணன் உடன் பூவரசியாக நடிக்கும் ராதிகா விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.