நயன்தாராவையே தூக்கி சாப்பிட்ட நடிகை… அசால்ட்டாக கையில் 9 படங்கள்!!!

0

முன்பெல்லாம் வெள்ளி திரையில் வாய்ப்புகள் இல்லை என்றால் தான் சீரியல் பக்கம் தனது கவனத்தை நடிகர் நடிகைகள் திருப்புவார்கள். ஆனால் இப்பொழுதோ சின்னத்திரையில் பிரபலமான பலர் தான் வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் பிரியா பவானி சங்கர். நாளுக்கு நாள் அவர் மார்க்கெட் எகிறி கொண்டே தான் போகிறது. தற்போது அவர் கைவசம் 9 படங்களை வைத்து உள்ளாராம்.

சினிமா வாய்ப்புக்காக தங்களின் சமூக வலைத்தளங்கில் படு கவர்ச்சியாக இறங்கி தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்நிலையில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் தனது நடிப்பு திறமையை மட்டும் நம்பி களமிறங்கியவர் நடிகை  பிரியா பவானி சங்கர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தான் டாப் நடிகை என் நினைத்த நிலையில் கை வசம் 9 படங்களுடன் அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு உள்ளார் பிரியா பவானி சங்கர் என்று கோலிவுட் வட்டாரங்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

நடிகை பிரியா பவானி சங்கர், சீரியல் நடித்த போதே அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து உள்ளன. இதனை பயன்படுத்தி மேயாத மான் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதில் இருந்து அவருக்கு ஏறுமுகமாகவே தான் இருந்து  இருக்கிறது. தற்போது அவர் கையில் 9 படங்கள் உள்ளனவாம்.

இதை அறிந்த நயன்தாரா ரசிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் எல்லாரும் எங்க  நயன்தாரா ஆகி விட முடியாது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது  “எல்லாருமே சூனாபானா ஆகிவிட முடியுமா” என தங்களின் எதிர்ப்பை கருத்துக்கள் வாயிலாக தெரிவிக்கின்றனர். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் , காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்கள்தான் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here