தெய்வ திருமகள் சீரியல் மூலம் சத்யாவாக பரிச்சயமானவர் நடிகை வாணி போஜன். அதை அடுத்து சில சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் தன்னை வெளிப்படுத்தியவர். மேலும் ஓ மை கடவுளே படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது அவர் வொண்டர் வுமன் 1984 கால் காடட் பாணியில் உடையணிந்து அந்த வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம் தான் வொண்டர் வுமன்1984. இதில் டயானா பிரின்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் வொண்டர் வுமனாக நடித்தவர் தான் கால் காடட். இந்த படமானது கடந்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா உள்பட சில நாடுகளில் திரையிடப்பட்டது. மேலும் எச்பிஓ மேக்ஸிலும் வெளியானது. அதன் பிறகு மே 14-ல் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியிடப்பட்டது.
தற்போது வொண்டர் வுமன் 1984 படத்தில் கால் காடட் பாணியில் வாணி போஜனும் விதவிதமான உடையணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் “என்னுடைய முயற்சிக்கு வொண்டர் வுமன் 1984 படத்தை விடவும் வேறு எது ஊக்கமாக இருக்க முடியும்” என பதிவிட்டுள்ளார் . இவரது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்