மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!!

0

கொரோனா மருந்துகள் மற்றும் சிகிச்சை தொடர்பான உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை மருந்து மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு:

ஜி.எஸ்.டி. 43வது கவுன்சில் கூட்டம் எட்டு மாதங்களுக்கு பின்னர் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில், மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.  தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்முறையாக ஜி,எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான, ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மாஸ்க், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம், சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கப்படுகிறது. எனவே மக்களுக்கு செலவு மிச்சமாகும்.  மருத்துவ ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மாஸ்க், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைப்பு என்று அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here