அனைத்து தனியார்,அரசு அலுவலங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி!!!

0

இன்று முதல் குஜராத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களும் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குஜராத்தில் ஜூன் 4 ஆம் தேதி முதல் அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.  உணவு விடுதிகளும் இரவு 10 மணி வரை டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 11 ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் அரசு, தனியார்  அலுவலகங்கள் 100 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குஜராத்தில் நீதிமன்றங்களும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலங்களும், நீதிமன்றங்களும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here