கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்க அனுமதி இல்லை – அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழகம் முழுவதுமுள்ள இந்து கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் நிலங்களாகவும், நகைகளாகவும் உள்ளது. இதனால் கோவில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்க அனுமதி இல்லை:

கடந்த 12 ஆண்டுகளாக தமிழகம் முழுவதிலும் திருப்பணிகள் நடைபெறாத கோயில்களை கணக்கெடுத்து, அவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது சென்னை வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வளாகங்கள், கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார்  250 கோடி ஆகும்,  இந்த சொத்துக்களை தமிழக அரசு இப்போது மீட்டுள்ளது. மீட்கப்பட்ட கோவில் நிலங்களை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ கோயில் நிலங்களில் குடியிருப்போர் யாரும் அந்த இடத்திற்கு உரிமைக்கோர முடியாது. கோயில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது” என்று கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here