வாணி ராணி சீரியலைப் பார்த்தவர்கள் மறக்க முடியாது பேரு தேனு. சின்னத் திரையில் குட்டிப் பாப்பாவாக அறிமுகமாகி இன்று பெரியஆளாகி நிற்கிறார் நேகா மேனன். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில், நடிப்பை வெளிப்படுத்தி அதிகமாக ரீல்ஸ் செய்து வருகிறார்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!
காதலிக்காத மனசே காதலிக்காதே:
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்யலட்சுமி’ சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இவர் நாரதன்’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். லாக்டவுனால் நடிப்பிலிருந்து விலகி இருந்தவர் தற்போது இரண்டு முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை போஸ்ட் பண்ணி வருகிறார்.
அந்த வகையில் இப்போது காதல் தோல்வி அடைந்த பாடலில் “காதலிக்காத மனசே காதலிக்காதே….காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே…” என்று ரீலிஸ் செய்துள்ளார். தற்போது அவற்றிக்கு 5,860 லைக்ஸ் வந்துள்ளது.
View this post on Instagram
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!