கொரோனவினால் உயிரிழந்த அரசு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை – மாநில அரசு அதிரடி!!

0
கொரோனவினால் உயிரிழந்த அரசு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை - மாநில அரசு அதிரடி!!
கொரோனவினால் உயிரிழந்த அரசு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை - மாநில அரசு அதிரடி!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் பொதுமக்களை போல் அரசு ஊழியர்களும் உயிரிழந்து வருகின்றனர். தற்போது அவர்கள் குடும்பம் பயனடையும் வகையில் மாநில அரசு ஓர் அதிரடியான நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் நாட்டில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலுமான மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அல்லது பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசம்:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய தேவைகள் மற்றும் முக்கிய அரசு அலுலகங்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்றினால் பல அரசு ஊழியர்கள் நாளுக்கு நாள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.தற்போது அவர்களது குடும்பங்கள் பயனடையும் வகையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் ஓர் அதிரடியான அறிவிப்பை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, இரக்கம் அடிப்படையில் முதல்வர் நியமனத்தின் கீழ் கொரோனாவினால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வேலை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here