TRPகாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான் – என்ன பண்ணாங்க தெரியுமா???

0

சமீபகாலமாக TRPகாக முன்னனி தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் சன் தொலைக்காட்சி வாராவாரம்  மக்களுக்கு பிடித்தவாறு பல திரைபடங்களை ஒளிபரப்பி வருகிறது.

சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்:

சின்னத்திரையில் ரசிகர்களை அதிகம் கவரும் நிகழ்ச்சிகளை கொடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடம் பிடிக்கவேண்டும் என்று தான் அனைத்து டிவி சேனல்களுக்கும் நடுவில் போட்டி இருந்து வருகிறது. முதல் முறையாக சன் டிவியில் மாஸ்டர் ஒளிபரப்பானதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி இருந்தார்கள். தேசிய அளவிலும் அது ட்ரெண்ட் ஆகி இருந்தது.

தற்போது அதுமட்டுமின்றி இந்தியளவில் டாப் 10 TRP பட்டியலில் சன் டிவி டாப் 3யில் இடம்பிடித்து வாராவாரம் சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் தனது சேனல் TRPகாக தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் திரை படங்களை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது வரும் வார இறுதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படங்களை ஒளிபரப்பு செய்ய போகிறது. இந்த திட்டத்தால் கண்டிப்பாக சன் டிவிஇன் TRP கணக்கு பண்ண முடியாத அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here