தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் திருவிழா – இதுவரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவு!!

1

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை வெளிவரவுள்ளது. இதனால் தமிழகமே தற்போது தேர்தல் சூட்டில் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தபால் வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தபால் வாக்குகள்:

தமிழகத்தில் இந்த மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தேர்தல் நடைபெறுமா என்று தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் இன்னும் சில மணி நேரத்தில் வெளிவரவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிக ஆவலாக காத்துகொண்டு வருகிறது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மிக அதிகமான அளவில் தபால் வாக்குகள் பதாவாகியுள்ளது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போது வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அடுத்த 5 ஆண்டுக்கு ஆளப்போவது யார்?? தமிழகத்தில் திக் திக் திக்..!!

இந்நிலையில் நாளை காலை 6 மணி அளவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கவுள்ளது. மறுபுறம் காலை 8 மணிக்கு மேல் வாக்கு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நாளை வாக்கு எண்ணிக்கையின் போது 35,836 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனை தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here