அடுத்த 5 ஆண்டுக்கு ஆளப்போவது யார்?? தமிழகத்தில் திக் திக் திக்..!!

0

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல்:

தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் புதிதாக யாரேனும் ஆட்சிக்கு வருவார்களா அல்லது இருக்கின்ற ஆட்சியே தொடருமா என்று அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதி மற்றும் ஓர் மக்களவை தொகுதியில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக சிறப்பாக தேர்தல் நடந்தது. தற்போது அதற்கான முடிவு நாளை வெளியாகவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று தமிழகத்தில் மிக அதிகமாக பரவி வருவதால் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மையங்களுக்கு வரும் அதிகாரிகள், முகவர்கள் அனைவரும் இரு தினங்களுக்கு முன்பே எடுத்திருந்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசியை செலுத்திக்கொண்டு சான்றிதழை கையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘நானும் நிறைய தப்பு பண்ணி இருக்கேன்’ – மனம் திறக்கும் சமந்தா!!

உடல் வெப்பத்தில் 98.6 பாரன்ஹீட்டிற்கு மேல் இருந்தால் மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை ஊரடங்கு என்பதால் வெற்றி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு என்னும் மையங்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தற்போது தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுக்கு யார் ஆளப்போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here