ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் ஆட்டம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. மேலும் நேற்றைய போட்டியில் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
விராட் கோஹ்லி
இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்களை குவித்தது. இதனை சேஸ் செய்த பெங்களூரு அணி மிக பிரம்மிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குறிப்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் படிக்கல் மற்றும் கோஹ்லி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய படிக்கல் சதம் பதிவு செய்து அசத்தினார். இவர் 52 பந்துகளை சந்தித்து 101 ரன்களை(11 பவுண்டரி 6 சிக்ஸ்) குவித்துள்ளார். மற்றொரு பக்கம் கேப்டன் கோஹ்லி 47 பந்துகளில் 72 ரன்களை(6 பவுண்டரி 3 சிக்ஸ்) குவித்து அசத்தினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோஹ்லி அரைசதம் கடந்த நிலையில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் கோஹ்லி. இவர் நேற்றைய போட்டியில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிங் கோஹ்லி. தற்போது இதனை வாழ்த்தி சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.