‘ரொம்ப தப்பா பேசுற கனி’ – கொந்தளித்த பாபா மாஸ்டர்! வைரலாகும் “ஸ்டார்ட் மியூசிக்” ப்ரோமோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஷோவான “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியில் இந்த வாரம் “குக் வித் கோமாளி” பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

“ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சி

தற்போது மக்கள் அனைவரும் ரியாலிட்டி ஷோக்களை தான் அதிகமாக விரும்புகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் என்று பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது, “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் 6 பிரபலங்கள் பங்கேற்பர்.

ஐசிசி டி 20 உலக கோப்பை – போட்டி நடைபெறும் மைதானங்கள் பற்றிய விவரம்!!

இந்த நிகழ்ச்சியில் கிண்டல், கேலி என்று மிகவும் நன்றாக இருக்கும். இந்த நிகழ்ச்சியினை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி 14.1 மில்லியன் டிஆர்பி ரேட்டிங்கில் சென்றது என்பதற்காக விஜய் அவார்ட்ஸில் “சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி” என்ற பட்டத்தினை வழங்கினர். இப்படியாக இருக்க, இந்த வாரம் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாபா மாஸ்டர், கனி, ஷகிலா, அஸ்வின், மதுரை முத்து, வெங்கடேஷ் பாட் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கனி பாபா மாஸ்டரை கேலி செய்ய அவருக்கு சட்டென்று கோபம் வந்து விடுகிறது. அப்போது மதுரை முத்து அவரை சமாதானம் செய்ய போக அவரையும் பாபா மாஸ்டர் திட்டி விடுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பிரியங்கா இருக்கிறார். இதனை பார்த்த பலரும் இது வெறும் பிராங்க் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல் பாபா மாஸ்டர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here