நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க இருக்கும் திரைப்படம் தான் “நம்பர் 21”. இந்த திரைப்படத்தில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“குக் வித் கோமாளி”பிரபலம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தற்போது புது புது பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. அந்த வரிசையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நடிகை பவித்தரா தற்போது லேட்டஸ்டாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த திரைப்படத்தில் அவருடன் சிவகார்த்திகேயனின் நண்பரும், நகைச்சுவை நடிகருமான சதீஷ் நடிக்க இருக்கிறார். பவித்ரா இந்த திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்ட ‘பூவே உனக்காக’ சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ!!
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமான புகழ் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஷிவாங்கியும் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இப்படியாக இருக்க பவித்ராவும் தற்போது திரைப்படங்களில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.