நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க வலைதளங்களில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடிகர் விஷ்ணு விஷால்
தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை மணமுடிக்க உள்ளார். கடந்த 12 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். ‘வெண்ணிலா கபடிக்குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடித்த முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு விருதுகளும் பல பாராட்டுகளும் கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘நேற்று இன்று நாளை’, ‘ராட்சசன்’ ஆகிய திரைப்படங்கள் விஷ்ணு விஷாலுக்கு சிறப்பான நடிகர் என்ற அந்தஸ்தை வாங்கி தந்தது. முன்னதாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் விஷாலுக்கு ரஜினி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்தது. சமீபகாலமாக விஷ்ணு விஷாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!
இவ்வாறு இருக்க நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா மீது காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக சுற்றிக்கொண்டிருந்தபோது ஜுவாலா குட்டாவின் சகோதரி திருமணத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கலந்து கொண்டார். இதற்கு பிறகு இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருப்பதை வலைதளங்கள் வழியாக மக்களுக்கு தெரிவித்தனர்.
Haha…
The little one made me run and sweat…
Thats how well they train at @JwalaGuttaAcad https://t.co/pozKhw3PUz— VISHNU VISHAL – V V (@TheVishnuVishal) March 27, 2021
இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டா இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருகின்றனர். இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா குட்டாவின் பேட்மிட்டன் பயிற்சி பள்ளியில் கற்கும் மாணவருடன் பேட்மிட்டன் விளையாடியுள்ளார். நாளுக்கு நாள் விஷ்ணு விஷால், ஜுவாலா குட்டாவின் நெருக்கம் அதிகமாகி வருவது இதிலிருந்தே தெரிகிறது. இன்னும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக உலா வருவதை காண முடிகிறது. இவர்கள் இருவரும் யாரை வெறுப்பேத்த இதெல்லாம் பண்றாங்களோ என இந்த ஜோடியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.