“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்த ஷிவாங்கி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழுக்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
ஷிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகும் பலரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றனர். அவர்களின் திறமைகளை அவர்கள் மக்களுக்கு அழகாக எடுத்து காட்டுவதால் தங்களது திறமையினை மட்டும் நம்பி வருபவர்கள் ஜெயித்து காட்டுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படி பலரையும் உற்சாகப்படுத்தும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமாக நிகழ்ச்சி என்றால் அது “குக் வித் கோமாளி” இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சமையல் நிகழ்ச்சியான இதில் நன்றாக சமைக்க தெரிந்த ஒருவர் குக்காகவும், ஓரளவுக்கு சமைக்க தெரிந்த ஒருவர் கோமாளியாகவும் இருப்பார். இந்த நிகழ்ச்சியில் சமையல் எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ அதனை விட கோமாளிகள் செய்யும் சேட்டைகள் தான் அதிகமாக பேசப்படும்.
இப்படியாக இருக்க கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். ஷிவாங்கி, புகழ், பாலா என்று அனைவரும் தங்களது எதார்த்தமான நகைச்சுவையின் மூலமாக ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.
ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!
இன்று சனிக்கிழமை என்பதால் ஷிவாங்கி தான் கோமாளிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.