சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிங்கர் பிரியங்கா ஒரு பல் மருத்துவரும் கூட. பிரியங்கா பல் மருத்துவராக பணியாற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
சூப்பர் சிங்கர் பிரியங்கா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த ஷோவுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எட்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் தற்போது திரையுலகில் பிரபலங்களாக இருந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த ஷோவில் ஜூனியர் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரியங்கா. இவரை பற்றி சொல்ல வேண்டுமானால், ஒரே பாடலில் தமிழ்நாடு அறியும் பாடகியான சூப்பர் சிங்கர் பிரியங்கா என்பது தான். பாடகி பிரியங்கா ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார் என்று தான் சொல்ல முடியும்.
என்னது வனிதாவுக்கு 5வது புருஷனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்ஸ்!!
அந்த அளவுக்கு பிரபலம் இவர் பாடிய அந்த பாடல். இதில் கிடைத்த வரவேற்பினால் யுவன் சங்கர் ராஜா உட்பட சில இசையமைப்பாளர்களின் இசையில் சினிமா படங்களில் பாடியுள்ளார் பிரியங்கா. இதுவரை பாடகியாக மட்டும் அறியப்பட்ட பிரியங்கா ஒரு பல் மருத்துவரும் கூட.
முன்னதாக பல் மருத்துவம் படித்து வந்த பிரியங்கா தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பல் மருத்துவத்தை பயிற்சிக்கும்படியான புகைப்படங்களை சூப்பர் சிங்கர் பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.