பிரேமலதாவை கொரோனா டெஸ்ட் எடுக்க அதிகாரிகள் வலியுறுத்தல் – பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!

0
PremalathaVijayakanth

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்திற்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரேமலதா:

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது சுகாதாரத்துறை குடும்பத்தில் உறவினர்கள் எவரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தேமுதிக கட்சியை சேர்ந்த பிரேமலதா தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில் பரப்புரையை மேற்கொண்டு வந்தார். ஏற்கனவே சதிஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அதிகாரிகள் பரிசோதனைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

PremalathaVijayakanth

‘மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் பலன் அதிகம்’ – முதல்வரின் பேச்சுக்கு கிளம்பிய சர்ச்சை!!

குடும்பத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால் பிரேமலதாவிற்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தற்போது இதுகுறித்து பேசிய பிரேமலதா, கட்சியின் பிரச்சாரத்தை திசை திருப்புவதற்காக அதிகாரிகள் இதனை செய்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது பிரேமலதா பிரச்சாரத்தை நான் தொடர்ந்து செய்கிறேன் என்றும் பிற்பகலில் வந்து பரிசோதனையை மேற்கொள்கிறேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here