என்னது வனிதாவுக்கு 5வது புருஷனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்ஸ்!!

0

சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா சீரியல் நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கலாய்த்து வருகின்றனர்.

வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா தான் இணையத்தில் தற்போது ட்ரெண்ட் என்று சொல்லலாம். இவரை பற்றிய சிறிய விஷயம் என்றாலும் அது தாறுமாறாக வைரலாகும். மேலும் மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமடைந்தவர். ஆரம்பத்தில் தனது மகனுக்காக போராடி பல பிரச்சனைகளை சந்தித்தார் வனிதா. கடைசி வரை ஸ்ரீஹரி வனிதாவுடன் வர மறுத்ததால் வழக்கு அவருக்கு எதிராகவே திரும்பியது. அதன் பிறகு வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது அடாவடி பேச்சும், நடவடிக்கையும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார். இதில் வனிதாவின் இன்னொரு முகத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அடுத்து சமயல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். அடுத்தடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகமாகும் 2 முக்கிய பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

எந்த ஒரு பேச்சுக்கும் செவிசாய்க்காமல் தற்போது வரை தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறார் வனிதா. தற்போது இவர் தெய்வமகள் சீரியலில் ராஜு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் என்பவருடன் இணைத்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. என்ன வனிதா 5வது புருஷனா?? என்று மீம்ஸ் வைரலாகி வருகிறது. இதனை அரவிந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ எடுத்து ஒரு குத்தமாடா?? என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here