விஜய் தொலைக்காட்சியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் ஒன்று இன்னும் சில நாட்களில் முடிய போகிறது என்ற தகவலை அந்த சீரியல் குழுவினர் ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியின் பிரபல சீரியல்
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான், சுந்தரி நீயும், சுந்தரன் நானும். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. எதார்த்தமான கதைக்களத்துடன் இந்த தொடர் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த சீரியல் என்றால் இஷ்டம். கடந்த சில நாட்களாக இந்த சீரியல் பெரும் சுவாரஸ்யத்துடன் நகர்ந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் – எம்ஜிஆர் பாடலை மனப்பாடம் செய்யும் பிரதமர்!!
சில விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும் இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து இந்த சீரியலை பார்த்து வந்தனர். இந்த சீரியல் பெரும் வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற இன்னொரு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தான். இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் தங்களது எதார்த்தமான அதே சமயம் குறும்பான நடிப்பு காரணமாக ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியான சூழலில் இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியினை அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களே உறுதி செய்துள்ளனர். அந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் ஒரு சேர ஒரு புகைப்படத்தில் இணைத்து போஸ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த சீரியல் முடிய இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி மற்றும் கவலையில் உள்ளனர்.