‘உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ – சசிகலா உரை!!

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தோழியான சசிகலா அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர்

தமிழகத்தின் முன்னாள் பெண் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்திய செல்வி.ஜெ. ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினம் இன்று. தனது சிறப்பான ஆட்சி திறமையால் அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்றும் மறையவில்லை. அவரது பிறந்தநாளை ஒட்டி இன்று கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இன்று காலை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமாவுக்கு கிடைத்த அங்கீகாரம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Tamil Nadu: VK Sasikala moves court in Chennai against her removal as AIADMK's general secretary

இப்படியாக இருக்க அவரது தோழியான சசிகலா இன்று பல நாட்களுக்கு பிறகு கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேசினார். இன்று காலை ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதியே சிறையில் இருந்து விடுதலையாகி வந்து விட்டார். ஆனால், அதன் பிறகு அவர் எந்த ஒரு கட்சி கூட்டத்திலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ பேசவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல நாட்களுக்கு பிறகு தற்போது தான் கட்சி தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது, “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியே வர அனைத்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பிராத்தனை செய்தனர். அவர்களின் பிராத்தனை தான் என்னை கடுமையான சூழலில் இருந்து வெளிவர காரணமாக இருந்தது. வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here