‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமாவுக்கு கிடைத்த அங்கீகாரம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமாவுக்கு, யூடியூப் சார்பாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் ஹேமாவுடன் சேர்ந்து அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகை ஹேமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் சில தொடர்களில் நடித்துள்ளார். நடிகை ஹேமா தற்போது நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர், இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகை ஹேமா மட்டுமல்லாது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஹேமா நடித்து வரும் மீனா என்ற கதாப்பாத்திரம் சற்று எதிர்மறையானது.

ஆனாலும் மீனா கதாப்பாத்திரம் தான் இந்த தொடருக்கு புது வேகத்தை கொடுத்து வருகிறது. நடிகை ஹேமா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பின் போது கர்ப்பமான இவர், பிரசவிக்கும் வரை இந்த தொடருக்கான தனது பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி – துணைநிலை ஆளுநர் பரிந்துரை!!

ஹேமா பிரசவத்துக்கு பின்பு சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்து வந்தது. தற்போது மீண்டுமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஹேமா. இவர் ‘ஹேமாவின் டைரி’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அந்த சேனலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புதளம், மேக்அப் வீடியோக்கள் உள்ளிட்ட சில வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரது சேனலுக்கு யூடியூப் நிறுவனம் சார்பில் சில்வர் பட்டன் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகை ஹேமா யூடியூபில் பதிவிட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here