இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:
நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை கச்சா எண்ணெயின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த கொரோனா காலத்திற்கு பின்பு பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது ஓராண்டுக்கு பின்பு கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 61 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மீது 61 சதவீதம் மற்றும் டீசல் மீது 56 சதவீதம் வரியை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
‘விஜய் பண்ண ஒரே தப்பு உன்கூட நடிச்சது தான்’ – வனிதாவை கழுவி ஊற்றும் தளபதி ரசிகர்கள்!!
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.59 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.85.98 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.92.59 மற்றும் டீசல் லிட்டர் ரூ.85.98 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.