விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படக்குழு அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா..!
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடக்க சில தினங்களே உள்ள நிலையில் ஆடியோ லான்ச்சை சிறிய ஹோட்டலில் நடத்த படக்குழு முடிவு எடுத்துத்துள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த காரணத்தால் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி, பாதுகாப்புக் காரணங்களுக்காக ‘மாஸ்டர்’ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஹோட்டலில் சிறிய விழாவாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
ரசிகர்கள் சோகம்..!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் தற்போது பெரிதாக நடக்க வாய்ப்பு இல்லாததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். விஜயின் குட்டி கதையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |