தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதில் தேமுதிக., விற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
6 உறுப்பினர் பணிக்கான தேர்தல்:
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் முத்துக்கருப்பன், சசிகலா புஸ்பா, விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜா ஆகிய நால்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன் மற்றும் திமுக சார்பில் திருச்சி சிவா ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 உடன் முடிகிறது. இந்த பதவிக்கான தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக வேட்பாளர்கள்:
இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. அதில் தேமுதிக கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. தம்பி துரை, கேபி முனுசாமி, ஜிகே வாசன் (தமாக) ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |