கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

0
minister vijayabasker
minister vijayabasker

தமிழகத்தில் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் மது அருந்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

புனேவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு நேற்று விமானம் மூலம் 5.36 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது. அவை திட்டமிட்டபடி பல்வேறு மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பின்னர் முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தடுப்பூசி பணிகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 307 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி தொடர்பாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களில் அதனை பரப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பாரதியிடம் உண்மையை சொல்ல வரும் துர்கா – சிக்குவாரா வெண்பா?? சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு அடுத்த 26 நாட்கள் களித்து இரண்டாவது டோஸ் போடப்படும். அதுவரை இடைப்பட்ட காலத்தில் அவர்கள் மது அருந்தக்கூடாது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை தனிமைப்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here