Monday, April 29, 2024

அமெரிக்காவை முந்தி பொருளாதார வல்லரசாகும் சீனா – ஆய்வறிக்கையில் தகவல்!!

Must Read

வரும் 2028ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் சீனா முதலிடம் பிடிக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் நாட்டில் நிலவிய நிலைமையை சீராக கையாண்டதால் சீனாவின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு:

இந்த நூற்றாண்டின் மிக பெரும் அச்சமாக உருவெடுத்துள்ள கொரோனா தொற்று, உலக நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் பல வருடங்களாக பொருளாதாரத்தில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி விட்டு சீனா முதலிடம் பிடித்து பொருளாதார வல்லரசாகும் என CEPR என்ற பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அது, கொரோனா கால நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதால் சீனாவின் பொருளாதாரம் மேம்பாட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் ரத்து – பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு!!

தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றையும், அதன் விளைவுகளையும் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதால், எதிர்பார்க்கப்பட்டதை விட 5 வருடங்களுக்கு முன்பாகவே சீனா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 5.7% இருக்குமெனவும், 2026 முதல் அது 4.5% ஆக குறையுமெனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்காவின் பொருளாதாரம் 2022 – 2024 வரை 1.9% ஆக இருக்கும் எனவும், ஜப்பான் இப்போது போலவே 3ம் இடத்தில் தொடரும் எனவும் கூறியுள்ளது. இந்தியா ஜப்பானை முந்தும் நிலை உருவானால் அந்த நாடு 4 அல்லது 5ம் இடத்திற்கு தள்ளப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் அதிக அளவில் உலக பொருளாதாரத்தில் பணவீக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பொருளாதார வளர்ச்சி சரிவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -