Saturday, April 20, 2024

ஒரே மேடையில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் – அதிமுக தேர்தல் பிரச்சாரம் நாளை முதல் துவக்கம் !!

Must Read

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக நாளை முதல் அதிமுக தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளது. அதற்கான பொதுக்கூட்டம் நாளை நடக்கவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரத்தை துவங்கவுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் :

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அணைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துவக்கியுள்ளனர். தற்போது அதிமுக சார்பில் நாளை சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து நாளை பொது கூட்டம் நடத்தவுள்ளார்கள். மேலும் இது அதிமுக அணியின் முதல் பொது கூட்டம் என்பதால் அனைத்து கட்சிகளும் வியக்கும் அளவிற்கு நடத்த வேண்டும் என்று கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிட உள்ளார். மேலும் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக சி.பொன்னையன் தலைமையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது நாளை தொடங்கவிருக்கும் பொதுக்கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கும். மேலும் இந்த கூட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேரை திரட்டவும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டத்தின் போது அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றவும் மற்றும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அமெரிக்காவை முந்தி பொருளாதார வல்லரசாகும் சீனா – ஆய்வறிக்கையில் தகவல்!!

மேலும் நாளைய பொது கூட்டத்தில் இ.பி.எஸ் மட்டும் ஓ.பி.எஸ் இருவரும் கூட்டணி கட்சிகள் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய கூட்டணி தொடருமா??அல்லது புது கூட்டணி அமையுமா என்று நாளை தெரியும். மேலும் இந்த பொதுக்கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -