Tuesday, May 14, 2024

வீரியம் மிகுந்த கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – ட்ரெண்டிங்கில் #CoronaVirusStrain ஹேஷ்டேக்!!

Must Read

இங்கிலாந்து நாட்டில் புதிதாக பரவி வரும் வீரியம் மிகுந்த கொரோனா வைரசால் பொது மக்கள் பயங்கர அச்சத்தில் உள்ளனர். மேலும் #CoronavirusStrain என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்:

2019ன் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2020ல் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துள்ளது. மேலும் இதன் தாக்கமானது தற்போது தான் குறைய தொடங்கியுள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்தும் மெல்ல தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. மேலும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தான் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் படிப்படியாக மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பரிணாம வளர்ச்சி அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர், போரிஸ் ஜான்சன் உறுதி செய்தார். மேலும், இந்த புதிய வகை வைரஸானது தற்போதுள்ள வைரஸை விட 70% வேகமாக பரவக் கூடியது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொது முடக்கம் அமல்:

நிலைமை மிகவும் மோசமடைந்து விட கூடாது என்ற காரணத்தால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப் போவதாகவும். இதனால் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலைமையின் காரணத்தால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவையை தடை செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து,பெல்ஜியம், ஆஸ்திரியா, துருக்கி, கனடா, இத்தாலி போன்ற நாடுகளும் தங்கள் விமான சேவையை இங்கிலாந்துடன் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் – பிசிசிஐ ட்விஸ்ட், ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

new corona strain
new corona strain

இந்தியாவிலும் இது தொடர்பான அச்சம் மக்களிடையே பரவி வருவதால் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் மக்களுக்கு ஆர்.டி. பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது சளியின் மாதிரியை புனே ஆய்வகத்திற்கு அனுப்பி அது புதிய வகை புதிய வகை கொரோனாவா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்ததால் தற்போது தான் மக்கள் பயத்திலிருந்து வெளிவர தொடங்கினர். ஆனால் புதிதாக வந்துள்ள வைரஸ் அதை விட வீரியம் மிகுந்து உள்ளதாக அறிந்த மக்கள் அதைக் குறித்து கூடுதல் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் #CoronavirusStrain என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.. உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 14) சென்னை கோயம்பேடு சந்தைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -