ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடர் – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு??

0

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இதில், முதலாவது டெஸ்ட் போட்டியானது 17ம் தேதி அடிலெய்டில் துவங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை அடைந்தது .

முதல் டெஸ்ட் போட்டி:

முதலாவது டெஸ்ட் போட்டியை கேப்டனாக வழிநடத்திய விராட் கோஹ்லி, தன் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் தாயகம் திரும்பியுள்ளார். இதனால் 2வது டெஸ்ட் போட்டியை ரஹானே வழிநடத்தி செல்லவுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் வீரர்கள் சொதப்பிய காரணத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட்:

இந்தியா -ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 26ம் தேதி தொடங்கவுள்ளது. இதுவே 2020ம் ஆண்டு இந்தியா விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில் சில வீரர்கள் மாற்றப்பட்டிற்கும் நிலையில், இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்க வாய்ப்புள்ளதா?? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் நடராஜன். இந்தியாவின் பயிற்சியிலும் ஈடுபட்ட இவர், முக்கிய வீரர்களான கோஹ்லி, ரஹானே, புஜாரா போன்ற வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.

‘என் புருஷனை பத்தி பேசாதீங்க ஆரி’ – சந்திரமுகியாக மாறிய அனிதா!!

இந்நிலையில் தான் இந்திய டெஸ்ட் அணிக்குள் இடம்பெற ரெடியாக இருக்க வேண்டும் என்று ரஹானே, நடராஜனிடம் கூறியதாக தகவல்கள் வருகின்றன.ஷமி காயம் காரணமாக விலகியுள்ளதால், ஷமிக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here