‘கோழி முட்டையால் பிரிந்த அன்பு கேங்’ – அர்ச்சனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கோழி முட்டை டாஸ்கால் பல சண்டைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சோம் மற்றும் அர்ச்சனா இடையே இதனால் சண்டைகளும் எற்பட்டுகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 70 நாளை கடந்துள்ளதால் தொடர்ந்து விளையாட்டுகள் கடினமாகி வருகிறது. மேலும் போட்டியாளர்கள் இடையே போட்டியும் அதிகரித்து வருகிறது. போன வாரம் அனிதா போட்ட போடால் அன்பு என்று சுற்றி திரியும் அர்ச்சனா கேங் நொறுங்கியது என்றே சொல்லலாம். போன வாரத்தில் அவர்கள் கூடவே இருக்கும் சோம் பற்றியே அர்ச்சனா நிஷாவிடம் புறணி பேசினார்.

அர்ச்சனா இதனை நாட்கள் நாமினேஷன் ஆகாமல் தப்பித்து வருவது எதனால் என்று பலரும் கேட்டு தான் வருகின்றனர். எப்படியாவது ஒரு விதத்தில் அர்ச்சனா இதிலிருந்து தப்பித்து விடுகிறார். போன வாரம் கூட அனிதா எதோ சொல்ல வந்ததற்கு நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு என்று மிரட்டவும் செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வாரத்தில் நடந்துகொள்வது கூட என்னவோ தன் வீடு போல நினைத்து கொண்டு அனைவரும் மிரட்டி தான் வருகிறார். அன்பால் இந்த கேம்மை விளையாட முடியாதா என்ற அவரின் கேள்வி சிரிப்பாகவே உள்ளது. போன சீசனில் முகினின் அன்பு ஒன்று தான் அனாதை என்ற வார்த்தை பலரையும் வெகுவாக கவர்ந்தது.

ஆனால் இந்த சீசனில் ‘அன்பு ஒன்று தான் ஸ்ட்ராட்டஜி’ என்று பின்பற்றி வருகிறார் அர்ச்சனா. ஆனால் அவரே சோம் சேகரை நாமினேட் செய்ய தான் செய்தார். இவ்வாறு பல குற்றசாட்டுகளை தொடர்ந்து அர்ச்சனா மீது ரசிகர்கள் வைக்கின்றனர். இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் கூட சோம் மற்றும் அர்ச்சனா இடையே சண்டைகள் தான் ஏற்பட்டுள்ளது.

கோழி முட்டை டாஸ்கில் அர்ச்சனா முட்டையை சோம் தொட அதை உடைத்ததாக சண்டையிடுகிறார் அர்ச்சனா. இது வாக்குவாதத்தில் முடிகிறது. கடைசி ப்ரோமோவில் வேறு அர்ச்சனா கதறி அழுவது போல கட்டப்பட்டுள்ளது. ரியோ, சோம் அர்ச்சனாவை எதிர்த்து பேச அதனால் மனமுடைந்த அர்ச்சனா அழுகிறார்.

நயன்தாராவை போலவே அச்சு அசலாக மாறிய அனிகா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

இதற்கு கூட அர்ச்சனாவை கிண்டலடித்து வருகின்றனர். ஆக மொத்தம் இந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேற போவது அர்ச்சனா தான் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here