ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘ஏர் பாட்ஸ் மேக்ஸ்’ அறிமுகம் – விலையை கேட்டா தலை சுத்திரும்!!

0

ஆப்பிள் நிறுவனத்தின் ஓவர் இயர் ஹெட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இது ஏர்பாட்ஸ் மேக்ஸ் என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் பட்ஜெட் ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய ஓவர் தி இயர் ஹெட்போனையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் – ஓவர் தி இயர்

புது புது யூகங்களை கொண்டு புது புது தொழில்நுட்பத்தில் புது புது மாடல்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தயாரிப்பதில் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் மொபைல், ஸ்மார்ட்போன் தவிர புது கேஜெட்களை கண்டுபிடிப்பது ஆர்வம் கொண்டுள்ளது. குறிப்பாக இயர் போன் கண்டுபிடிப்பில்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக வையர்லெஸ் ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்துஅதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கைப்பற்றியது. ஏர்பாட்ஸ்-லேயே முன்னேற்றங்களையும் செய்து வந்தது. சமீபத்தில் வெளியான ஏர்பாட்ஸ் ப்ரோ அதன் வடிவத்தின் மூலம் பல தரப்புகளின் பாராட்டுகளைப் பெற்றது.

ஏர்பாட்ஸ் மீது மட்டுமே கவனம் செலுத்திய ஆப்பிள், ஓவர் தி இயர் ஹெட்போன்ஸ் மீது தனது கவனத்தை செலுத்தியது. இந்நிலையில் தற்போது புதிதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற புதிய ஓவர் தி இயர் ஹெட்போன் அறிமுகம் செய்தது. இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஆப்பிள் iOS 14.3, iPadOS 14.3, macOS Big Sur 11.1, watchOS 7.2, tvOS 14.3 இந்த OSகளில் மட்டுமே செயல்படும்.

மேலும் இந்த இயர் போனில் ஆட்டோமேட்டிக் சுவிட்ச், ஆடியோ ஷரிங் வசதியும் உள்ளது. ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ-வில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. குறிப்பாக ஏர்பாட்ஸ் மேக்ஸ்-ல் ஆக்டீவ் நாய்ஸ் கேன்சல்லேஷன், டிரான்ஸ்பிரென்சி மோட், அடப்டீவ் ஈக்யூ மற்றும் ஹெட்போனை ஆப்பிள் வாட்ச் மூலம் கட்டுப்படுத்தும் சேவையும் உள்ளது.

நோக்கியா ப்யூர் புக் லேப்டாப் சீரிஸ் – இந்தியாவில் விரைவில் அறிமுகம்??

இத்தகைய சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஓவர் தி இயர்-ன் விலை 550டாலர்கள். இது இந்தியா ரூபாயில் ரூ.59,900 ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ஓவர் தி இயர் ஹெட்போன் ஏர்பாட்ஸ் மேக்ஸ் டிசம்பர் 15ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது.

இந்த ஹெட்போன் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ ரீசெல்லர்-களிடம் மட்டுமே கிடைக்கும். இதை பெற ஆப்பிள் இணையதளத்தில் ஆர்டர் செய்ய வேண்டும். ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஓவர் தி இயர்” நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here