பள்ளி மாணவர்களுக்கு இனி “நோ ஹோம் ஒர்க்” – மத்திய அரசு புதிய உத்தரவு!!

0

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையினை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பாடபுத்தப்பையின் அளவினை வகுத்து நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் உடல் நலம் மற்றும் கல்வி நலன் கருதி இந்த நெறிமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாட புத்தகப்பை அளவு:

மாணவர்கள் கொண்டு போகும் புத்தகப்பை மற்றும் அவர்களது வீட்டு பாடம் குறித்து சில வருடங்களுக்கு முன் அனைவராலும் வைக்கப்பட்ட ஒரு குற்றசாட்டு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது வைக்கப்பட்டது. இதனால் அரசு மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டு பாடங்கள் செய்ய கொடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தற்போது அமலில் வர இருக்கும் கல்வி கொள்கையினை மையமாக கொண்டு பாடபுத்தகப்பை கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,

  • பள்ளிகள் வழங்கும் புத்தப்பையின் அளவு மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.
  • புத்தப்பையின் அளவு குறித்து பெற்றவர்கள் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.
  • புத்தகத்தின் எடையினை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.
  • மாணவர்களின் புத்தகப்பையினை அழிவினை குறைக்கும் நோக்கில் அனைத்து பள்ளி நிர்வாகங்களும் வளாகத்தில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  • பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ட்ரொலி பாக் மற்றும் சக்கர கேரியர் வாங்கி கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது.
  • பையின் எடையினை சரி பார்க்க பள்ளிகள் தங்கள் வளாகங்களில் டிஜிட்டல் எடை இயந்திரம் வைத்திருக்க வேண்டும்.
  • மதிய உணவு வழங்கும் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களுக்கு தரமான அதே சமயம் சத்தான உணவுகளை வழங்க வேண்டும்.
  • மாணவர்கள் பள்ளி புத்தகங்களை தவிர்த்து பிற புத்தகங்களை படிக்கச் பள்ளிகள் வலுவாகி ஏற்படுத்தி தர வேண்டும்.
  • இனி 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்க கூடாது. அதே போல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 2 மணி நேரம் வீட்டு பாடம் செய்யும் படி வீட்டு பாடம் வழங்கப்பட வேண்டும்.

அதே போல் மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வீட்டு பாடங்களை செய்யும்படி வீட்டு பாடங்களை தருவதை தவிர்க்க வேண்டும். அவர்களை பள்ளிகளில் முன் நின்று பேசவும், அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – கல்வித்துறை முடிவு!!

இவ்வாறாக இந்த புதிய பாடப்புத்தக கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நலன் மற்றும் மன நலனிற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here