கொரோனா பாதிப்பு எதிரொலி – OYO நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணிநீக்கம்??

0

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பல துறைகளும் சரிவடைந்தது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை அடைந்தது. வர்த்தக நிறுவனங்கள் சரிவை சமாளிக்கும் பொருட்டு தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்திய சுற்றுலா துறையும் கடும் பாதிப்பை சந்தித்ததன் விளைவால், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட துறைகளும் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில் OYO என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பத்தில் இந்திய ஹோட்டல் வர்த்தகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கொரோன ஊரடங்கினால் இந்த நிறுவனமும் மிகப்பெரிய சரிவடைந்தது. இந்நிறுவனம் தங்கள் செலவுகளை குறைக்கும் பொருட்டு பணியாளர்களை ஊரடங்கு காலத்தில் நிரந்தரமாக ஒர்க் பிரம் ஹோம் கொடுத்தது. இருந்த போதிலும் மேலும் சரிவடைந்ததால் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

நோக்கியா ப்யூர் புக் லேப்டாப் சீரிஸ் – இந்தியாவில் விரைவில் அறிமுகம்??

ஊழியர்களை பணிநீக்கம் செய்தது தொடர்பாக இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அவர் “நிறுவனத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை, சில குறிப்பிட்ட வர்த்தக வடிவத்தில் அடிப்படை மாற்றங்களைச் செய்து வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் , கூட்டணிகளுக்கும் சிறப்பான சேவை அளிக்கும் பணியைத் தொடர முடியும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாகவே OYO நிறுவனம் சரிவை சந்தித்து வருவதும் ஊழியர்களை நீக்கம் செய்வதற்கு கூடுதல் காரணமாக இருக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here