நோக்கியா ப்யூர் புக் லேப்டாப் சீரிஸ் – இந்தியாவில் விரைவில் அறிமுகம்??

0

நோக்கியா தனது புதிய படைப்பான நோக்கியா ப்யூர்புக் லேப்டாப் இந்தியாவின் பிரபலமான இகாமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனை செய்யப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நோக்கியா ப்யூர் புக் லேப்டாப்

பிரபல முன்னணி நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது மடிக்கணினி எனும் லேப்டாப் தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக நோக்கியா தனது லேப்டாப்பின் சீரிஸ் மட்டுமே வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அந்த லேப்டாப் பற்றிய சிறப்பம்சங்கள், விலை பற்றிய விவரங்களும் இல்லை. இது சக்தி வாய்ந்ததாகவும், எடை குறைவாகவும், இம்மெர்சிவாகவும் இருக்கும் எனும் வார்த்தைகளை தவிர வேறு விவரங்களை வெளியிடவில்லை.

இந்த லேப்டாப் பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் BIS எனும் பூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் பட்டியலின் படி 9 மாடல்கள் உள்ளது தெரியவருகிறது. அந்த 9 மாடல்கள் NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL42S, NKi310UL82S, NKi310UL85S.

இதில் NK என்பது நோக்கியா நிறுவனத்தையும், i 5 என்பது இன்டெல் கோர் ஐ 5 ப்ராசஸ்சரையும் i 3 என்பது இன்டெல் கோர் ஐ 3 ப்ராசஸ்சரையும் 10 என்பது 10த் ஜெனரேஷன் இன்டெல் ப்ராசஸ்சரையும் குறிக்கிறது. ஜூலை மாதம் வை-ஃ பை ரூட்டர் சிஸ்டம் “பெக்கான் 1” என்ற பெயரில் லான்ச் செய்தது. “பூல்ட் டூ எம்பவர்” என்ற வார்த்தை மட்டுமே அதன் போஸ்டர்களில் உள்ளது.

861 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்ற கட்டிடம்!!

சியோமி நிறுவனமும் லேப்டாப் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வரும் நிலையில் நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த மாடல்கள் எவ்வாறு மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது? மேலும் நோக்கியா நிறுவனம் அந்த லேப்டாப்கள் அதிகார பூர்வமாக என்று சந்தைக்கு வரும்? அதன் விலை எவ்வளவு? அது எவ்வாறு வேலை செய்யும் என்ற தகவல்களை மறைமுகமாகவே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா நிறுவனம் தனக்கான இடத்தை எப்போதும் தக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here