சீனாவில் உருவாகி தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் நடத்தவிருந்த பல நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் தகவல் தொடர்பு துறையில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநாடுகள் ரத்து..!
கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் கூடும் கூட்டங்கள் மட்டும் மாநாடுகள் நடத்தவிருந்த பல நிறுவனங்கள் அதை கைவிட்டு உள்ளன. பேஸ்புக் வருகின்ற மே மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் மெக்எனெரி கன்வென்சன் சென்டர், சான் ஜோஸில் நடத்த இருந்த அதன் ஆண்டு மாநாட்டினை ( F8 Developer Conference 2020) ரத்து செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
மைக்ரோசாப்ட், சோனி நிறுவன மாநாடுகள்..!
சோனி நிறுவனம் ப்ளே ஸ்டேசன் ஈவன்ட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்த இருந்த ப்ளே ஸ்டேசன் ஈவன்ட்டும் அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்நிறுவனங்கள் பாதிப்படையும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |