Sunday, May 19, 2024

டெல்லியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!

Must Read

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு மீண்டும் முழு பொது முடக்கத்தினை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்:

டெல்லியில் கடந்த சில நாட்களாக டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. தற்போது உள்ள நிலவரப்படி டெல்லியில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இப்படி இருக்க டெல்லியில் மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முழு பொது முடக்கத்தினை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “மக்கள் அனைவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக உழைத்து வருகின்றனர். வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த அரசு சார்பிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த திட்டம் – பயனர்கள் அதிர்ச்சி!!

“மக்கள் அனைவரும் இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் கை, கால்களை அடிக்கடி கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கினை சந்தை, கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் அமல்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். மருத்துவமனைகளில் மத்திய அரசு சார்பில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -