Tuesday, May 14, 2024

வங்கிக்கான சேவை கட்டணம் உயர்த்தப்படவில்லை – மத்திய நிதியமைச்சகம்!!

Must Read

இன்று மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிக்கான சேவை கட்டணத்தை உயர்த்துவதாக இல்லை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்:

டெல்லியில் மத்திய நிதியமைச்சகம் அதிகாரிகளுடன் அலையோசனை மேற்கொண்டது. மத்திய நிதியமைச்சகம் நடத்திய கூட்டத்தில் பொதுத்துறை வங்கியின் சேவைக்கட்டணத்தை உயர்த்துவதா? இல்லையா? என்ற பேச்சு வார்த்தை நடந்தது. நடந்த பேச்சு வார்த்தையில் பொதுத்துறை வங்கிக்கான சேவைக்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பினை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகான சேவைக்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி விதியின்படி, பொதுத்துறை வங்கி மட்டும் அல்லாமல் அதைச்சார்ந்த அனைத்து வங்கிகளும் நியமன முறையில் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நவம்பர் 1 ஆம் தேதி முதல் சில சலுகைகளை குறைப்பதாக அறிவித்திருந்த பேங்க் ஆப் பரோடா, கோரோனோ வைரஸ் அதிகமாக பரவும் காரணத்தால் இச்சேவை தற்சமயம் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட 41.13 கோடி “ஜன்தன்” வங்கி கணக்கு உட்பட, 60.04 கோடி சேமிப்பு கணக்குகளுக்கும் எந்த வங்கியும் தற்சமயம் வரை சேவை கட்டணத்தை உயர்த்தவில்லை.

இனியும் உயர்த்துவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று அனைத்து வங்கி சார்பில் தெரிவித்தாக அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இவ்வாறாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -