தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதிரடியாக ஷாக் கொடுக்கும் வகையில் அவரது திருமண நாளை அறிவித்தார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல்.
காஜல் அகர்வால்
ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் மாடலிங் துறையில் கால் பதித்தவர். ஹிந்தி திரையுலகில் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு பல முயற்சிக்கு பின் தான் தமிழில் உருவான பொம்மலாட்டம் படத்தில் அர்ஜுன் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனாலும் காஜலுக்கு திரையுலகில் அந்த அளவிற்கு மார்க்கெட் இல்லை என்றே சொல்லலாம். பேரரசு இயக்கிய பழனி படத்தில் பரத் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதெல்லாம் அவருக்கு ஆரம்பகால படமாக இருந்ததே தவிர நடிப்புக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
தெலுங்கிலும் காஜலுக்கு வாய்ப்பு கிடைக்கவே சந்தாமாமா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு 2009 இல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான மகதீரா படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது வரையிலும் வளர்ந்து வரும் நாயகியாக இருந்த காஜல் முன்னணி நடிகையாக மாறினார்.
அதன் பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் இணையும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அடுத்தடுத்து இளைய தளபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவரின் தங்கை நிஷா அகர்வால் திருமணம் ஆகி மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.
அடுத்து காஜலுக்கு திருமணம் எப்பொழுது என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வந்தனர். லாக்டவுன் சமயத்தில் அவரது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்தது. மேலும் திருமண தேதியையும் தனது வலைப்பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் காஜலும் அவரது வருங்கால கணவரும் இணைந்திருக்கும் புகைப்படமும் வெளியானது. தற்போது அவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை காஜல் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.