EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூல் – திருப்பித் தர வங்கிகளுக்கு RBI உத்தரவு!!

0

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வட்டிக்கு வட்டி வசூல்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் உரிய வருமானம் இன்றி தவித்ததால், வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணை செலுத்துவதற்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்தன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு உறுதி அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

emi

அதில் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒத்திவைக்கப்பட்ட EMI தொகைகளுக்கு (ரூ.2 கோடிக்கும் குறைவான கடன் தொகை) வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியின் தடைக்காலத் திட்டத்தின் கீழ் வட்டி தள்ளுபடியை விரைந்து செயல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த திட்டத்தை குறிப்பிட்ட கடன் கணக்குகளில் கடன் வாங்குபவர்கள் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை பெறலாம். ஊரடங்கு காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டி தொகையை அந்தந்த வங்கிகள் தொகையை நவம்பர் 5 அல்லது அதற்கு முன்னர் கடன் வாங்கியவரின் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இது தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வாடிக்கையார்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன்பின்னர் வங்கிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் அரசாங்கத்திடம் திருப்பிச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here