2,500 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை – ஜியோவின் மாஸ்டர் பிளான்!!

0

இந்தியாவில் 4 ஜி மொபைல் போன்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ ஆகும். மேலும் ஜியோ ஃபோனுக்கு ரூ.1,500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்தியாவில் 5ஜி இணைப்பைக் கொண்டு வர முயற்சிகளை எடுத்து வரும் ஜியோ நிறுவனம், 5ஜி போன்களை 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.

ஜியோ 5ஜி மொபைல்:

ரிலையன்ஸ் ஜியோ தற்போது 2 ஜி இணைப்பைப் பயன்படுத்தும் 20-30 கோடி மொபைல் போன் பயனர்களை குறிவைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக 5ஜி போன்களை ​​ரூ .2,500-3,000 விலையில் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​பிற நிறுவனங்களின் 5 ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.27,000 ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

43வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி இந்தியாவை 2ஜி இணைப்பு இல்லாத நாடாக மாற்ற உறுதி எடுத்துள்ளார். அப்டேட் செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ள ஜியோ நிறுவனம், 5ஜி ஸ்மார்ட் போன்களை மலிவு விலையில் வழங்க திட்டமிட்டு வருகிறது.

ஜியோ நிறுவனத்தின் 7.7 சதவீத பங்குகளுக்கு கூகிள் ரூ .33,737 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை உருவாக்க அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஜியோவுடன் கூட்டு சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள சூழலில் இந்தியாவில் 5ஜி இணைப்பை கொண்டுவர நீண்ட காலம் பிடிக்கும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here