Saturday, May 25, 2024

சர்வதேச பட்டினி பட்டியல் – அண்டை நாடுகளை விட பின்தங்கிய இந்தியா!!

Must Read

சர்வதேச பட்டினி பட்டியலில் இந்தியா அதிர்ச்சிகரமாக 94வது இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை விட பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

சர்வேதேச பட்டியல்:

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைந்த மக்களின் எண்ணிக்கையினை வைத்து சர்வேதேச பட்டினி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. 107 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா தற்போது 94 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 8 இடங்கள் முன்னேறி உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா இந்த வருடம் பின் தங்கி உள்ளது, அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

வெல்த் அண்ட் ஹெர்பல் மற்றும் கன்ஸ்ரன் வேர்ல்ட்வைட் இணைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதம் பேர் பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழக அரசு பயிற்சி மைய மாணவர்கள் நீட் தேர்வில் அசத்தல் – 1,615 பேர் தேர்ச்சி!!

இந்த பட்டியலில் நமது அண்டை நாடுகள் நமது நாட்டை விட முன்னிலையில் உள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 73 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் 88 வது இடத்திலும், வங்கதேசம் 75 வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டை விட முன்னேற்றம்:

கடந்த ஆண்டு இந்தியா 102 வது இடத்தில் இருந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு 8 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் கொரோனா கால பாதிப்புகள் இதில் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மக்களின் எண்ணிக்கை, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் போன்ற பல காரணங்ககளை வைத்து தயாரிக்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -