கவர்ச்சி ராணியாக மாறிய அமலாபால் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

0
amala paul
amala paul

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அமலா பால். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் உள்ளார். தற்போது நடுக்காட்டில் விசித்திரமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். அவரது முதல் படமே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அப்படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். அதன் பிறகு அவர் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. படமும் செம ஹிட் ஆனது.

amala paul
amala paul

அதன் பிறகு அமலா பாலிற்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை, வேலையில்லா பட்டதாரி, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம்  என படு பிஸியாக மாறினார் அமலா பால்.

amala paul
amala paul

மேலும் அவர் நடிக்க வந்த குறுகிய காலகட்டத்திலேயே அவருக்கு முன்னணி நடிகரான விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெய்வத்திருமகள், தலைவா இப்படத்தின் இயக்குனரான ஏ.எல். விஜயை காதலித்து வந்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணமும் நடந்தது.

amala paul
amala paul

திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது திரையுலகினை பெரும் அதிர்ச்சியாக்கியது. மேலும் ஏ.எல். விஜய் மறுமணமும் செய்து கொண்டார். விவகாரத்திற்கு பிறகு சுதந்திரமாக மாறியிருக்கும் அமலா பால் பல போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆடை படத்திற்கு பிறகு ஆளே மாறிப்போன அமலாபால் தொடர்ந்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது நடுக்காட்டில் விசித்திரமான ஆடையில் சுற்றி திருந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here