Wednesday, May 29, 2024

ஆளுநர் முடிவு வரும்வரை மருத்துவ கலந்தாய்வு கிடையாது – தமிழக அரசு அதிரடி!!

Must Read

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளி வந்த பின் தான் மருத்துவ கலந்தாய்வு குறித்து யோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மனு தாக்கல்:

மதுரையை சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றியினை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டதாவது, “அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடஒதுக்கீடு வழங்குவதில் ஆய்வு மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்டதுடன், அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

“அந்த அறிக்கை தற்போது ஆளுநரின் முடிவுக்காகவும் ஒப்புதலுக்காகவும் அனுப்பபட்டுள்ளது. அந்த அறிக்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நீட் முடிவுகள் வெளிவர உள்ளது. அதற்குள்ளாக இந்த ஆண்டே மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” இவ்வாறாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி வருத்தம்:

இந்த வழக்கினை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி விசாரித்தனர். இது குறித்து பதில் அளித்த தமிழக அரசு கூறியதாவது “7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை” என்று கூறியுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அரசு பள்ளி மாணவர்களை நினைத்து நீதிமன்றத்திலேயே கண்கலங்கினார்.

ராகு தோஷம் முழுமையாக நீங்க வேண்டுமா?? ராகு கால துர்க்கை அம்மன் பூஜை!!

அவர் கூறியதாவது,”அரசு பள்ளிகளில் பயில்வோர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர்கள். அவர்கள் இவ்வாறு தொடர்ந்து வாடட்டும் என்று விட்டு விடலாமா?? அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறாக வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -