விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருபவர் தான் மீரா மிதுன். பிரபலங்களை பற்றி தகாத வார்த்தைகளை பேசி தன்னை தானே பெருமை பேசி வரும் மீரா மிதுனுக்கு இப்பொழுது திருமணம் நடக்க உள்ளதாம்.
மீரா மிதுன்
முதன்முதலில் மாடலிங் துறையில் கால் பதித்த மீரா மிதுன் அதன்பிறகு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு பிக் பாஸில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். ஆனால் பிக் பாஸிற்கு வந்த முதல் நாளே அபிராமி, சாக்ஷி உடன் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு அவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். அதன்பிறகு தர்ஷன் மீது இவருக்கு காதல் உருவாகவே அதுவும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் வெளியே வந்து பல சர்ச்சைக்குரிய வீடீயோக்களை வெளியிட்டார்.
மேலும் பல ஆபாச புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். மேலும் தமிழில் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் விஜயையும் அவரது குடும்பங்களையும் இழிவு படுத்தும் விதமாக பேசி வீடியோவை வெளியிட்டார்.
இதனால் கடுப்பான அவர்களின் ரசிகர்கள் மீரா மிதுனின் உருவப்படத்தை எரித்து அவர்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர். ஆனால் விஜய் மற்றும் சூர்யா இதனை கண்டுகொள்ளவே இல்லை. சூர்யா மற்றும் விஜய் தனது வளர்ச்சியை பார்த்து பொறாமை படுவதாகவும், தனக்கு வரும் வாய்ப்புகளை தடுப்பதாகவும் தொடர்ந்து பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.
இப்படி ஒரு புகழ் இவருக்கு தேவையா என்று அனைவரும் அசிங்கப்படுத்தியும் மீரா மிதுன் எதையும் நிறுத்திய பாடில்லை. இப்பொழுது தனது வலைப்பக்கத்தில் Couple Goals, challenge accepted என்று ஒரு வாலிபருடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
https://t.co/yirHygGMec
While hearing this song we couldn resist doing some moves?Check out the link☺️Actor Kunal,handsome self made talented actor gave much hits is no more, purely because of Kollywood politics just like #SushantSinghRajputDeathCase
Dedicated to you Kunal ?❤️ pic.twitter.com/bCjY4mD7mX— Meera Mitun (@meera_mitun) September 28, 2020
‘பாவம் சின்ன பையனா இருக்கான் விட்ருங்க’ என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். மீரா மிதுனுக்கு ஜூன் மாதத்தில் நிச்சயம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாப்பிளை பற்றிய எந்த விவரத்தையும் கூற விரும்பவில்லை என மீரா மிதுன் கூறியிருக்கிறார்.