Tuesday, April 30, 2024

கொரோனா நோயாளிகளும் ஓட்டு போடலாம் – அக்டோபர் 28 அன்று பீகார் சட்டசபை தேர்தல்!!

Must Read

பீகார் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தேர்வு முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அன்று தெரியவரும் என்று தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல்:

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அவரது ஆட்சி காலம் முடியுள்ளதால் பீகாரில் சட்டசபை தேர்தல் பற்றிய விவரத்தை தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடக்கும் என்று கூறியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Nitish-kumar
Nitish-kumar

பதிவான ஓட்டுகள் நவம்பர் 10 ஆம் தேதி அன்று எண்ணப்படும். மேலும், மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் விளக்கியுள்ளார்.

வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியவை:

  • பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் கட்சி வேட்பாளர்கள் 5 நபர்களை மட்டும் தான் அழைத்து செல்ல வேண்டும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

மக்கள் பின்பற்ற வேண்டியவை:

  • 80 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் தபால் மூலமாக தங்களது ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.
  • கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் கடைசி நாள் அன்று தங்களது ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டினை பதிவு செய்யலாம்.
  • தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
  • சட்டசபை தேர்தல் மூன்று கட்டமாக நடக்கும்.
  • 16 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஓட்டு போடுவதற்கு தகுதி பெற்றவர்கள் தான்.

இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. ஆட்சி காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -