டிசம்பர் வரை இலவச கொரோனா நிவாரண பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

0
Kerala Chief Minister

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கேரள மாநில அரசு சார்பில் இலவச மளிகை கிட் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், டிசம்பர் வரை கிட் வழங்கப்படும் என தெரிவித்தார். மாநிலம் முழுவதும் 88,42,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Kerala Health Minister
Kerala Health Minister

கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என பினராயி விஜயன் கூறினார். இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. ஆனால் மாநில அரசின் சிறந்த நடவடிக்கைகளால் தொற்று முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் பாதிப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் வழங்கப்படும் தொற்று நோய்களை சிறப்பாக கையாள்வது, கட்டுப்படுத்துவதற்கான விருது இம்முறை கேரளாவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிகளும் ஓட்டு போடலாம் – அக்டோபர் 28 அன்று பீகார் சட்டசபை தேர்தல்!!

கேரளாவில் கொரோனா ஊரடங்கு, ஓணம் பண்டிகை காலங்களிலும் பொதுமக்களளுக்கு இலவச மாளிகைப் பொருட்கள் கிட் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வழங்கப்பட உள்ள கிட் டிசம்பர் இறுதி வரை பொதுமக்களுக்கு கிடைக்கும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here