Monday, May 13, 2024

இதுக்கே பயந்தா எப்படி, இனி தான் ஆட்டமே ஆரம்பம் – கொரோனா குறித்து WHO எச்சரிக்கை!!

Must Read

தற்போது கொரோனா பரவல் ஆரம்ப நிலையில் தான் உள்ளது என்றும் அதன் தாக்கம் இன்னும் வரும் மாதங்களில் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக டேவிட் நபாரோ மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த வருட டிசம்பர் மாதத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உள்ள நிலவரப்படி உலகில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்தியாவிலும் தொடர்ந்து பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் தற்போது ஆரம்ப நிலையை தான் அடைந்துள்ளது, அதன் தாக்கம் வரும் நாட்களில் அதிகமாக இருக்குமென்று உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செயலாளர்கள் மாநாடு:

லண்டனில் நடந்த வெளியுறவுத் துறை செயலாளர்களின் கூட்டத்தில் உலக சுகாதார துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் உலக சுகாதார அமைப்பின் பொது நிர்வாக இயக்குனர் டேவிட் நபாரோ குறிப்பிட்டுள்ளதாவது “கொரோனா பரவல் குறைந்து விட்டதாக உலக நாடுகள் கருதுகின்றன. ஆனால், இது வெறும் ஆரம்ப நிலை. இன்னும் இதன் தாக்கம் அதிகரிக்கும். மக்கள் ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.”

விசாரணைக்கு அழைத்து சென்ற போது இளைஞர் மரணம் – ஆய்வாளர் உட்பட மூவர் மீது வழக்கு!!

“ஆனால், அனைவரும் அலட்சியமாக உள்ளனர். அடுத்து ஏற்பட போகும் பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவர். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ சுகாதார அமைச்சகம் குறித்து தவறாக வதந்தி பரப்பி உள்ளார் அது முற்றிலும் அர்த்தமில்லாத குற்றசாட்டு. நாங்கள் எந்த நாட்டிற்கும் விலை போகவில்லை.” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -