Monday, May 6, 2024

பப்ஜி விளையாட 2 லட்ச ரூபாய் செலவு – தாத்தாவின் பென்சனில் கை வைத்த 15 வயது சிறுவன்!!

Must Read

“பப்ஜி” ஆன்லைன் விளையாட்டிற்காக 15 வயது சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் பென்ஷன் பணத்தில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமாக தொகையை எடுத்து பயன்படுத்தியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

“பப்ஜி” விளையாட்டு:

இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் அதிகமாக விளையாடும் ஒரு ஆன்லைன் விளையாட்டு “பப்ஜி”. அனைவரும் தீவிரமாக விளையாடும் இந்த விளையாட்டில் பணம் கட்டினால் அடுத்த அடுத்த படிநிலைகளுக்கு போகலாம். இந்த “பப்ஜி” விளையாட்டால் பல வினோதமான சம்பவங்கள் நடந்துள்ளன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

pubg game
pubg game

பலர் இதனை விளையாட முடியாமல் தற்கொலை கூட செய்துள்ளனர். இதனால் இந்த விளையாட்டினை மத்திய அரசு தடை செய்துள்ளது. தற்போது டெல்லியை சேர்ந்த சிறுவன் இந்த விளையாட்டிற்காக பல லட்சங்களை செலவழித்துள்ளான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்டு மூலம் பரிவர்த்தனை:

டெல்லியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் PUBG விளையாடுவதை தனது வழக்கமாக வைத்துள்ளான். அப்போது அடுத்த அடுத்த படிநிலைகளுக்கு செல்ல அவனுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது ஒரு நாள் தனது தாத்தாவின் டெபிட் கார்டு கீழே கிடப்பதை பார்த்து அதனை எடுத்து வைத்துள்ளான். பின் அந்த கார்டை “பப்ஜி” விளையாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று முடிவும் செய்துள்ளான்.

hacking
hacking

தொடர்ச்சியாக அவரது கார்டை பயன்படுத்தியுள்ளான். OTP வரும் போது மட்டும் அவரது தொலைபேசியை எடுத்து பயன்படுத்தி உள்ளான். இப்படியாக நடந்து கொண்டு இருக்க ஒரு நாள் இவருக்கு வங்கியில் இருந்து 275 ரூபாய் மட்டுமே மீதம் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.

போலீசார் அறிவுரை:

இதனால் குழப்பமடைந்த அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்துள்ளனர். அதில் அவரது கார்டில் இருந்து பரிவர்த்தனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது பேரன் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளான் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளனர்.

மாரடைப்பால் உயிரிழந்த தெலுங்கு வில்லன் ஜெயப்ரகாஷ் ரெட்டி!!

அவரது பேரன் 2.75 லட்சம் ரூபாயை இந்த ஆன்லைன் விளையாட்டிற்காக செலவு செய்துள்ளான். தனது சொந்த பேரன் இப்படி செய்ததால் அவர் வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால், போலீசார் அந்த சிறுவனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -