Tuesday, May 28, 2024

செப்டம்பரில் துவங்க இருக்கும் பொது முடக்கம் 4.0 – திரையரங்குகள் திறக்கப்படுமா??

Must Read

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் அரசு அறிவித்த பொது முடக்கம் நிறைவடைவதால், அடுத்த கட்ட பொது முடக்கம் இப்படி தான் இருக்கும் சில எதிர்பார்ப்புகள் உள்ளது.

கொரோனா பீதியால் பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா என்ற நோய் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கும் உள்ளாகியது. இந்த பரவலை தடுக்க இந்திய அரசு 144 சட்டத்தின் கீழ் பொது முடக்கத்தை பின்பற்ற உத்தரவு பிறப்பித்தது. இதுவரை இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

curfew restrictions
curfew restrictions

பொது முடக்க உத்தரவை வரும் 31 ஆம் தேதிக்கு வரை பல வித தளர்வுகளுடன் நீடித்து வைத்திருந்தது, இந்திய அரசு. தற்போது இந்த உத்தரவு முடிய இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், அடுத்த கட்ட பொது முடக்கம் மேலும் சில தளர்வுகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன என்ன தளர்வுகள் இருக்கும்??

அடுத்த கட்ட பொது முடக்கமான 4.0 எப்படி இருக்கும் என்று சில எதிர்பார்ப்புகள், இதோ..

  • வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து பொருளாதார சம்பந்தமான நிறுவனங்கள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த ரயில் சேவைகள் தொடங்கப்படலாம், அது குறித்த தகவல்களை இந்த வாரத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • அப்படி ரயில் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் பயணசீட்டை ஆன்லைன் மூலமாக பெற வழிவகை செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக தான் உள்ளது, ஆனால், ஐ.ஐ.டி போன்ற கல்லூரி நிறுவனங்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன டா பண்ணி வெச்சுருக்கீங்க தளபதியா?? – போஸ்டரை பார்த்து நொந்து போன விஜய் ரசிகர்கள்!!

  • திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக தான் உள்ளது, ஏனென்றால் மக்கள் சரியாய் சமூக இடைவெளி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.
  • மதசார்ந்த திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான தடைகள் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில அரசு அதிகாரிகள் கூறுகையில் “அடுத்த கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் வழங்கப்படாத துறைகளை பற்றி தான் குறிப்பிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள் அதே போல் தான் இருக்கும் என்றும், அதற்கான எந்தவித தளர்வுகளும் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -